ஜாயிடம் முட்டி போட்டு காதலை சொன்ன மாதம்பட்டி ரங்கராஜ்.. ரொம்ப மோசம்!
மாதம்பட்டி ரங்கராஜ்
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். இந்நிகழ்ச்சிக்கு முன் சில படங்கள் நடித்தாலும் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.
அதன்பின் தனக்கு தெரிந்த சமையல் தொழிலில் களமிறங்கியவர் அதில் குறைந்த நேரத்திலேயே பெரிய வெற்றியை கண்டார். எந்த ஒரு பிரபலம், அரசியல்வாதியின் திருமணம் என்றாலும் மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் குழு தான் அங்கு இருக்கும்.
இப்போது வெளிநாடுகளிலும் தனது தொழிலை பிரபலப்படுத்தியுள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ் முதல் மனைவி ஸ்ருதியை விவாகரத்து செய்யாமல் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்து தற்போது அவர் 6 மாத கர்ப்பமாக உள்ளார்.
ரொம்ப மோசம்!
இந்த பிரச்சனை தொடர்ந்து பரபரப்பாக ஓடி கொண்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது மாதம்பட்டி பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
இதில், மாதம்பட்டி ரங்கராஜ், முட்டி போட்டு ஜாய்க்கு புரபோஸ் செய்தது மட்டுமின்றி, பல ஜென்மம் தாண்டி வந்த உறவே என கூறி இருக்கிறார். தற்போது, இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
உறவே பல ஜென்மம் தாண்டி வந்த உறவே... முட்டி போட்டு காதலை சொன்ன ரங்கராஜ்..@joy_stylist
— Sivasankari Talks (@sivasan_talks) September 14, 2025
Full video link in Bio #Sivasankari #SivasankariTalks #JoyCrizildaa #MadhampattyRangaraj pic.twitter.com/zU8LWx97E8