தமிழ்நாட்டில் மதராஸி படம் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். ஒவ்வொரு திரைப்படத்திலும் தனது நடிப்பையும் நட்சத்திர அந்தஸ்தை வளர்த்து கொண்டே செல்கிறார்.
இவர் நடிப்பில் கடந்த ஆண்டு அமரன் படம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் நம்பர் 1 படமாக மாறியுள்ளார். அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வெளிவந்துள்ள படம் மதராஸி.
இப்படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்க அனிருத் இசையமைத்திருந்தார். நடிகை ருக்மிணி வசந்த் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வித்யுத் ஜாம்வால், ஷபீர், விக்ராந்த், பிஜு மேனன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு நேற்று திரையரங்கில் வெளிவந்த மதராஸி படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிலர் கலவையான விமர்சனங்களையும் முன் வைத்துள்ளனர். இந்த நிலையில், மதராஸி படத்தின் தமிழக வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் மதராஸி படம் முதல் நாள் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இது இப்படத்திற்கு கிடைத்துள்ள நல்ல ஓப்பனிங் ஆக பார்க்கப்படுகிறது. இனி வரும் நாட்களில் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூல் செய்து சாதனை படைக்கபோகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.