2ம் மனைவியை விவாகரத்து செய்கிறாரா மதுரை முத்து!! பகிர் தகவலை சொன்ன அவரது மனைவி
சின்னத்திரை பிரபலங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே தனி மவுசு உண்டு. கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு போன்ற சின்னத்திரைகளை நிகழ்ச்சிகளில் கலக்கி வருபவர் தான் மதுரை முத்து.
கடந்த 2016 -ம் ஆண்டு முத்துவின் மனைவி லேகா 2016ம் ஆண்டு கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அதன்பின் சில மாதத்தில் மனைவியின் தோழியான நீத்து என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் நீத்து தனது சோசியல் மீடியா பக்கத்தில், "எனக்கு என்று ஒரு உயிர் வேண்டும், அது என்னை மட்டுமே நேசிக்க வேண்டும். அவருக்காகவே நான் பொட்டு வைத்து சந்தோஷமாக இருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு முறையும் நான் ஏமாந்து போய்க்கொண்டே இருக்கிறேன்" என்று நீத்து சோகமான வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இதனால் முத்துவுக்கும் நீத்து இடையே சண்டை ஏற்பட்டுவிட்டதா? இருவரும் விவாகரத்து செய்ய போகிறார்களா? என்று ரசிகர்கள் கமன்ட் செய்து வருகின்றனர்.