முதல் மனைவியின் தோழியை 2ஆம் திருமணம் செய்த மதுரை முத்து!! கொடுத்து வைக்காத கொடுமை சம்பவம்

Star Vijay Madurai Gossip Today
By Edward Dec 21, 2022 10:04 AM GMT
Report

சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பல வருடங்களுக்கு முன் கலந்து கொண்டவர் மதுரை முத்து. தற்போது அதே நிகழ்ச்சிக்கு நடுவராகவும் விஜய் தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகளில் காமெடி நட்சத்திரமாக பணியாற்றி வருகிறார்.

மதுரை முத்து, லேகா என்பவரை திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்று வளர்ந்திருந்தார். கடந்த 2016ல் பிப்ரவரி மாதம் கார் விபத்தில் உயிரிழந்தார்.

தனது 32 வயதில் மரணமடைந்த சில மாதங்களில் மதுரை முத்து அவரது தோழியான பல் மருத்துவர் நீத்து என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

மனைவி இறந்து சில மாதங்களில் இரண்டாம் திருமணம் தேவையா என்று மதுரை முத்து மீது விமர்சனமும் எழுந்தது. தற்போது முதல் மனைவி லேகா பற்றிய சில தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, முதல் மனைவி லேகாவிற்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் கணவர் இறந்துள்ளார். பெண் குழந்தையுடன் கஷ்டப்படும் அவரை பார்த்து வருத்தப்பட்ட மதுரை முத்து, லேகாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்காத நிலையில் அவரை மதுரை முத்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அந்த வாழ்க்கை கொடுத்து வைக்காமலே போக தன் இரு பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக லேகாவின் தோழி நீத்துவை திருமணம் செய்து கொண்டார், மதுரை முத்து.