மகளுக்கு அம்மா இல்லாமல் இதை அனுபவித்தேன்! நெகிழ வைத்த மதுரை முத்து..
பிரபல தொலைக்காட்சி பிரபலமாக மக்கள் மனதை ஈர்த்து வருபவர் மதுரை முத்து. சில வருடங்களுக்கு முன் தன் முதல் மனைவி வையம்மாள் கார் விபத்தில் மரணமடைந்தார். இது தன் மகள்களையும் பாதித்து வந்ததால் கடும் கஷ்டத்திற்கு உள்ளாகி வந்தார் மதுரை முத்து.
இதனையடுத்து அடுத்த ஆறு மாதம் கழித்து மனைவியின் தோழி நீத்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். கேபிஒய், குக்வித் கோமாளி உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரையும் சிரிக்க வைத்து வந்தார்.
தற்போது சூப்பர் டேடி நிகழ்ச்சியில் தன் மகளுடன் கலந்து கொண்டு வருகிறார். இந்த வார எபிசோட்டின் சூப்பர் டேடி நிகழ்ச்சியின் பிரமோ வீடியோ வெளியாகியுள்ளது.
ஒரு ஆளுக்கு அப்பா, அம்மா இருக்கிற, என் மகளிடம் பார்த்தேன் என்று கூறி அனைவரையும் அழவைத்துள்ளார். அரங்கமே நெகிழ்ந்த இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலர் ஆறுதல் கூறி வருகிறார்கள்.