காந்தக்கண்ணழகியாக நியூ லுக்!! அழகில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்கும் நடிகை மகாலட்சுமி!!
Serials
Mahalakshmi
Tamil TV Serials
By Edward
சின்னத்திரை சீரியல் நடிகையாக திகழ்ந்து பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தரை இரு வருடமாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவரின் திருமணம் பெரியளவில் விமர்சிக்கப்பட்டாலும் அதையெல்லாம் தம்பதியினர் கண்டுகொள்ளாமல் சிறப்பாக வாழ்ந்து வருகிறார். சில தினங்களுக்கு முன் ரவீந்தர் சோகமாக தனியாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
மனைவியுடன் பிரச்சனை விவாகரத்து என்று செய்திகள் பரவியது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க நடிகை மகாலட்சுமி கணவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து பதிலடி கொடுத்தார்.
அதன்பின், மகாலட்சுமி சீரியலில் நடித்தும் ஆடை மற்றும் அணிகலன்களை விளம்பரப்படுத்தியும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தும் வருகிறார். சேலையணிந்து அழகிய புகைப்படங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.