திருமணத்திற்கு பின்னும் குறையாத அழகு...மகாலட்சுமி ரவீந்தர் புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

Ravindar Chandrasekaran Mahalakshmi
By Edward Dec 02, 2022 03:30 AM GMT
Report

சின்னத்திரையில் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி பின் சீரியல் நடிகையாக நடிக்க ஆரம்பித்தவர் மகாலட்சுமி. முன்னணி சீரியல்களான அரசி, வாணிராணி, பிள்ளைநிலா, அன்பே வா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தார்.

தற்போது சன் டிவி சீரியல்களில் நடித்து வரும் மகாலட்சுமி ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கும் போதே சில சர்ச்சைகளில் சிக்கினார். அதன்பின் கணவரை விவாகரத்து செய்து பிரிந்து மகனுடன் தனிமையில் வாழ்ந்து வந்தார்.

பின் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார் மகாலட்சுமி. திருமணம் முடிந்த நாளில் இருந்து பல விமர்சனங்களை சமாளித்து அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்கள்.

மகாலட்சுமி சீரியலிலும் விளம்பரங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். கிடைக்கும் நேரத்தில் க்யூட் போட்டோஷூட் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். தற்போது கிளோசப் செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.