சங்கர் மகளை பொதுஇடத்தில் அவமதித்து மன்னிப்பு கேட்ட நடிகர் மகேஷ்பாபு..வீடியோ

shankar maheshbabu balaiya aditishankar aiswaryashankar
By Edward Feb 06, 2022 12:55 PM GMT
Report

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகர் மகேஷ் பாபு. சமீபத்தில் அவர் நடித்த சர்காருவாரிபாட்டா படம் வரும் மே 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் நந்தமுரி பாலகிருஷ்ணா அவர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மகேஷ் பாபு இயக்குனர் சங்கர் பற்றியும் கூறியுள்ளார்.

என்னுடைய குழந்தைகளுடன் நான் டின்னருக்காகவெளியில் சென்றிருந்தேன். அப்போது என்னிடம் இரு பெண்கள் செல்ஃபி எடுக்க வந்தார்கள். குடும்பத்துடன் வந்திருக்கிறேன் அதனால் எடுக்க முடியாது என்று கூறினேன்.

பின் அவர்கள் இருவரும் இயக்குனர் சங்கர் மகள்கள் என்று தான் தெரியவந்தது. இதுகுறித்து இயக்குனர் சங்கரை சந்தித்து பேசிய போது இதுபற்றி கூறி மன்னிப்பு கேட்டேன்.

அதற்கு அவர்கள் பிரபலங்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை அவர்களுக்கும் தெரியட்டும் என்று ஈஸியாக பதிலளித்தார்.அதன் அந்த மனசு என்று கூறியுள்ளார் மகேஷ் பாபு.