இது அநியாயம்! சமந்தாவை தொடர்ந்து மகேஷ் பாபுவை ஏமாற்றிய நடிகர்!

samantha television ntr N. T. Rama Rao Jr. Evaru Meelo Koteeswarulu
By Edward Dec 06, 2021 06:00 PM GMT
Report

தெலுங்கு தொலைக்காட்சி சேனலில் Evaru Meelo Koteeswarulu என்ற கோடிஸ்வரன் நிகழ்ச்சியை என் டி ஆர் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிறப்பு விருந்தினர் போட்டியாளராக நடிகை சமந்தா கலந்து கொண்டார்.

25 லட்சம் வரை போட்டியில் ஜெயித்திருக்கும் போது போட்டியை நிறுத்தியுள்ளனர். சாதாரண மக்களுக்கு தான் கோடியில் போட்டிகள் பிரபலங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நேரப்படிதான் கேள்விகள் கேட்கப்படும் என்று என்டிஆர் கூறியிருந்தார்.

இதனால், சமந்தா அதிர்ச்சி அடைந்து காமெடியாக வாக்குவாதம் செய்தார். அதேபோல் இந்த வாரம் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு வரவழைக்கப்பட்டார். அவருக்கு அதேபோல் 50 லட்ச ரூபாய் கேள்வியை கேட்கும் போது அலாரம் அடித்து நிறுத்தப்பட்டது. இதனால் மகேஷ் பாபு இது அநியாயம் என்று புலம்பி கூறியுள்ளார்.