அமலா பாலிற்கு அடித்த லக்! அந்த படம் இல்லை என்றால் அந்தமாதிரி நடிகை என பெயர் வாங்கி இருப்பார்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை அமலா பால். அறிமுகமான முதல் படத்திலேயே சர்ச்சை கதாபாத்திரத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மலையாள நடிகையாக நடித்து தமிழில் மைனா படத்தின் வெற்றியால் கொடிக்கட்டி பறந்தார்.

இதையடுத்து முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கனவுக்கன்னி ஆகும் அளவிற்கு உயர்ந்தார். என்னதான் வெற்றி படங்கள் கொடுத்தாலும் முதல் படம் வைத்து தான் அனைவரும் நடிகைகளை பற்றி எடைபோடுவார்கள். அந்தவகையில், அப்போது பிரபு சாலமன் மைனா படத்தில் நடிப்பதற்கு முதலில் அனன்யாவை அணுகியுள்ளார்.

ஆனால் அப்போது நாடோடிகள் படம் வெற்றி அடைந்ததால் பிரபுசாலமனின் வார்த்தைக்கு பெரிய அளவு மரியாதை கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் பிரபுசாலமன் அமலாபாலை படத்தின் ஒத்திகைக்கு வர சொல்லி உள்ளார். அப்போது அவர் முழு மேக்கப்போடு வந்துள்ளார். இதனை பார்த்துவிட்டு பிரபுசாலமன் முழு மேக்கப்போடு வரவேண்டாம் எனக் கூறியுள்ளார்.

வீட்டிற்கு போய் மேக்கப் இல்லாமல் ஒரு புகைப்படத்தை பிரபு சாலமனுக்கு அனுப்பியுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த பிரபுசாலமன் உடனே மைனா படத்தின் கதாநாயகி நீங்கள்தான் எனக்கூறி அனன்யாக்கு கொடுக்க வேண்டிய பட வாய்ப்பை அமலாபாலுக்கு கொடுத்து புக் செய்துள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்