சூப்பர் சிங்கர், ஸ்டார் மியூக் நிகழ்ச்சியில் இருந்து விலகவுள்ள மாகாபா ஆனந்த்! இது தான் காரணம்?

supersinger priyanka television startmusic makapa anand
By Edward Mar 17, 2022 02:00 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க்கும் பலர் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து முக்கிய பங்கினை ஆற்றி வருகிறார்கள். தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது.

ஆரம்பத்தில் இந்நிகழ்ச்சியை திவ்யா, டிடி, சிவகார்த்திகேயன், பாவனா, ரம்யா போன்ற தொகுப்பாளர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்கள். சமீபத்திய நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த், பிரியங்கா தொகுத்து வழங்கி வந்தனர்.

கடந்த ஆண்டு பிரியங்கா பிக்பாஸ் 5 சீசனுக்கு சென்றதால் அவரால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாமல் போனது. அவருக்கு பதில் மாகாபா ஆனந்துடன் சீரியல் நடிகை மைனா நந்தினி தொகுத்து வழங்கி வந்தார்.

பல வாரங்கள் சென்ற பின் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் பிரியங்கா திரும்பவில்லை. அதன்பின் ஒரு வாரத்திற்கு மட்டும் வந்து இண்ட்ரோ கொடுத்து சென்றுவிட்டார்.

பிக்பாஸ் நண்பர்களுடன் இரு வாரங்கள் ஹைதராபாத் சென்று உல்லாசமாக இருந்தார். இதனால் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை மைனா தொகுத்து வழங்கினார்.

மாகாபா ஆனந்த் அவுட் :-

கடந்த வாரம் மைனா நந்தினி மற்றும் மாகாபா ஆனந்த் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை. அவர்களுக்கு பதில் பிரியங்காவும் கேபிஒய் குரேஷியும் தொகுத்து வழங்கியுள்ளனர்.

மாகாபா தாய்லாந்து டூர் :-

கடந்த சில வாரங்களுக்கு முன் பிரியங்கா ஹைதராபாத் டூர் சென்றதால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத காரணமாக இருந்தது. அதேபோல் கடந்த வாரம் மாகாபா ஆனந்த் பங்கேற்காததற்கு வேறொரு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் வரும் ஏப்ரல் 14 ஆம்தேதி மாகாபா ஆன்ந்த் தாய்லாந்து டூர் செல்ல இருப்பதால் அந்த வாரங்களில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சிகளில் இருந்து விலகிவிடுவாராம். அவருக்கு பதில் யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.