மைனா மாகாபாவை தூக்கிவிட்டு சூப்பர் சிங்கரில் பிரியங்கா குரேஷி! எத்தனை பேர்தான் வருவீங்க..

anchor supersinger priyanka makapaanand mynanandini
By Edward Mar 16, 2022 06:35 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க்கும் பலர் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து முக்கிய பங்கினை ஆற்றி வருகிறார்கள்.

தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் இந்நிகழ்ச்சியை திவ்யா, டிடி, சிவகார்த்திகேயன், பாவனா, ரம்யா போன்ற தொகுப்பாளர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்கள். சமீபத்திய நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த், பிரியங்கா தொகுத்து வழங்கி வந்தனர்.

 பிரியங்கா பிக்பாஸ் :-

கடந்த ஆண்டு பிரியங்கா பிக்பாஸ் 5 சீசனுக்கு சென்றதால் அவரால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாமல் போனது. அவருக்கு பதில் மாகாபா ஆனந்துடன் சீரியல் நடிகை மைனா நந்தினி தொகுத்து வழங்கி வந்தார்.

பல வாரங்கள் சென்ற பின் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் பிரியங்கா திரும்பவில்லை. அதன்பின் ஒரு வாரத்திற்கு மட்டும் வந்து இண்ட்ரோ கொடுத்து சென்றுவிட்டார்.

பிக்பாஸ் நண்பர்களுடன் இரு வாரங்கள் ஹைதராபாத் சென்று உல்லாசமாக இருந்தார். இதனால் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை மைனா தொகுத்து வழங்கினார்.

குரேஷி இன், மாகாபா ஆனந்த் அவுட் :-

இந்நிலையில், கடந்த வாரம் மைனா நந்தினி மற்றும் மாகாபா ஆனந்த் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை. அவர்களுக்கு பதில் பிரியங்காவும் கேபிஒய் குரேஷியும் தொகுத்து வழங்கியுள்ளனர்.

ஏன், மாகாபா ஆனந்த் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று தெரியவில்லை. ஆனால் மைனா நந்தினி தன் கணவருடன் துபாய்க்கு சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இப்படி ஒரு நிகழ்ச்சியை தொகுப்பாளர்களை மாற்றி மாற்றி தொகுத்து வழங்கச்செய்வது எந்தவிதத்தில் நன்றாக இருக்கும். ஆரம்பத்தில் மாகாபா ஆனந்த், பிரியங்காவின் காம்போ தான் கோவிட் சமயங்களில் கூட அழகாக இருந்தது. தற்போது பார்க்கவே முடியவில்லை என்று ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.