அந்த ரூமில் அதுதான் நடந்தது!! ஆனால் இன்னும் நயன்தாரா மறக்கவில்லை!! நடிகை கூறிய ரகசியம்..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வரும் நடிகை நயன்தாரா, தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் கணவர் விக்னேஷ் சிவனுடன் ரொமான்ஸ் செய்தும் தன்னுடைய இரட்டை குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டும் வருகிறார்.
நடிப்பை தாண்டி பல்வேறு தொழில் நிறுவனங்களை ஆரம்பித்து கல்லாக்கட்டி வரும் நடிகை நயன் தாரா, சமீபத்தில் வெளிநாட்டில் நடந்த நிகழ்ச்சிக்காக கிளாமர் லுக்கில் சென்று கணவருடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில், கனடாவில் 9ஸ்கின் பிராடெக்ட்டை ஆரம்பித்திருக்கிறார்.
மேலும் ஒருசில விளம்பர படங்களில் நடித்து வரும் நயன்தாரா பற்றிய ஒரு தகவலை நடிகை மாலா பார்வதி பகிர்ந்துள்ளார்.
கேரள டிவி சேனலில் நான் பணியாற்றிக் கொண்டிருந்த போது டயானா மரியம் குரியன் என்கிற நயன்தாராவை முதன்முதலில் பார்த்தேன். பொதுவாகவே எனக்கு மேக்கப் போட்டுவிட பிடிக்கும் என்பதால் அந்த சேனலின் மேக்கப் ரூமிற்கு நான் பொறுப்பேற்று இருந்தேன். அப்போது சமயம் என்ற நிகழ்சிக்காக தன்னுடைய பெற்றோருடன் டயானா வந்திருந்தார்.
நான் டயானாவுக்கு மேக்கப் போட்டுக்கொண்டிருந்த போது அவரது பெற்றோர்கள் என்னிடம் வந்து, எங்கள் மகளுக்கு இரு பட வாய்ப்புகள் வந்திருப்பதாகவும் இதில் எந்த இயக்குனர் படத்தில் நடிக்கலாம் என்றும் கேட்டார்கள். அதற்கு நான் சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் கரியரை துவங்கினால் நன்றாக இருக்கும் என்று கூறினென். அப்படியே சத்தியன் அந்தக்காடு இயக்கத்தில் டயானா கரியரை துவஞ்க்கினார்.
அதன்பின் அன்னப்பூரணி படத்தின் ஷூட்டிங் இடத்தில் நயன் தாராவை பார்த்தேன். லேடி சூப்பர் ஸ்டார் என்ற இடத்தில் இருக்கும் நயன் தாராவுக்கு என்னை நியாபகம் இருக்குமா என்று நினைத்தேன். ஆனால் என்னை பார்த்தவுடன் என்னிடம் வந்து ரொம்பவே சாதாரணமாக பேசினார் நயன் தாரா.
43 வயசுல தான் கல்யாணம் ஆச்சு.. சினிமால வந்ததுக்கு அதையே பண்ணி சம்பாதிச்சு இருக்கலாம்!! நடிகை லாவண்யா தேவி..
இத்தனை ஆண்டுகளுக்கு பின் என்னை நினைவுபடுத்தி வைத்து பேசியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்ததாகவும் பெரிய ஸ்டார் என்கிற பந்தாவே அவரிடம் இல்லை, நான் சைவம் சாப்பிடுவேன் என்று தெரிந்து எனக்கு சைவ சாப்பாடு கொடுத்தார்.
எந்த பின்னணியும் இல்லாமல் இவ்வளவு சாதித்திருக்கும் நயன் தாராவை பார்த்து எனக்கு சந்தோஷமாக பெருமையாக்வும் இருக்கிறது என்று மாலா பார்வதி தெரிவித்திருக்கிறார். இவர் இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியது குறிப்பிடத்தக்கது.