இந்த நடிகை தான் வேண்டும்? இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட தனுஷ்..
master
dhanush
maaran
tamilactress
malavikamohanan
By Edward
தமிழில் பேட்ட படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்து அறிமுகமாகியவர் மாளவிகா மோகனன். மலையாளம், தெலுங்கு என கதாநாயகியாக நடித்து வந்த மாளவிகா நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் மூலம் பிரபலமானார்.
இப்படத்தில் கமிட்டாகியது முதல் ரசிகர்களால் கவனிக்கப்பட்ட நடிகையாக திகழ்ந்தார். மாஸ்டர் படத்திற்கு பின் நடிகர் தனுஷின் மாறன் படத்தில் நடித்து வந்தார். ஓடிடி தளத்தில் இப்படம் சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில் அதற்கான பிரமோஷன்களில் கலந்து கொண்டும் பேட்டியளித்தும் வருகிறார் மாளவிகா.
தனியார் இணையத்தளத்திற்கு பேட்டியளித்த மாளவிகா, தன்னை தனுஷ் தான் என் பெயரை இயக்குனரிடம் சிபாரிசு செய்தார். பல விஷயங்களை எனக்கு கற்றுக்கொடுத்துள்ளார். தனுஷுடன் நடனமாடவில்லை, அப்படி யாராவது கொடுப்பார்கள் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.