அந்த இடத்தை கேட்ட ரசிகர்!! புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த விக்ரம் பட நடிகை
மலையாள சினிமாவில் பட்டம் போலே, நிர்ணயம் போன்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, தி கிரேட் பாதர் படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.
இதன்பின் 2019ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் சசிகுமாரின் மனைவியாக பூங்கொடி மாலிக் ரோலில் நடித்து தமிழில் கதாநாயகியாக நடித்தார். அதன்பின் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்திலும் தனுஷுன் மாறன் படத்திலும் நடித்தார்.
இவ்விரு படமும் மாளவிகாவிற்கு சரியான் ஸ்கோப் தரமுடியாமல் போனது. அதன்பின் மலையாளத்தில் கிறிஸ்டி படத்தில் தன்னைவிட சிறு வயது நடிகருடன் நடித்து சர்ச்சையிலும் சிக்கினார். தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில், சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மாளவிகா மோகனன், கிளாமர் புகைப்படங்களால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருவார்.
தற்போது இன்ஸ்டாகிராம் லைவ் சேட்டில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அதில் ஆர்ம்பிட் என்று கூறி அந்தரங்க அங்கத்தை பற்றி கேட்டிருக்கிறார்.
அதற்கு மாளவிகா, பாலிவுட் நடிகர் ஜான் அப்ரஹாமின் சட்டை போடாத கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்து, யாருடையது என்று நீங்கள் குறிப்பிடவில்லை என கூறி பதிலடி கொடுத்திருக்கிறார். மேலும் சிலர் அந்தரங்க கேள்விகளை கேட்டு முகம் சுளிக்கவும் வைத்துள்ளனர்.
