கவர்ச்சி காட்டுவதில் என்ன தப்பு..நான் அப்படித்தான்!! மாளவிகா மோகனன் பளார் பதில்..
மாளவிகா மோகனன்
தெலுங்கு, தமிழ், இந்தி போன்ற மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். மாஸ்டர், மாறன், தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த மாளவிகா, தற்போது சர்தார் 2 படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
கிளாமர் குயினாக அறியப்படும் நடிகை மாளவிகா, கிளாமர் காட்டுவது குறித்த தன்னுடைய வெளிப்படையாக கருத்தை பகிர்ந்துள்ளார். ஒரு ரசிகர், ஏன் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுகிறீர்கள், படவாய்ப்புக்காக இப்படி செய்கிறீர்களா? என்ற கேள்வி கேட்டுள்ளார்.
கவர்ச்சி காட்டுவதில் என்ன தப்பு
அதற்கு மாளவிகா மோகனன், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில் என்ன தவறு இருக்கிறது. இந்தக்காலத்து டிரெண்ட்டுக்கு ஏற்றபடி நான் மாறியிருக்கிறேன். இப்போது இருப்பவர்கள் அனைவரும் கவர்ச்சி போட்டோவை ரசித்து பார்க்கிறார்கள்.
அவர்களுக்காக நான் வெளியிடுகிறேன். இதில் உங்களுக்கு என்ன வெறுப்பு. கவர்ச்சி காட்டுவது என்னுடைய விருப்பம் என்று வெளிப்படையாக பதிலடி கொடுத்திருக்கிறார்.