அவுங்க லேடி சூப்பர் ஸ்டார் லாம் இல்ல.. மீண்டும் மீண்டும் வன்மத்தை கக்கும் விஜய் பட நடிகை
நடிகர்களுக்கு சமமாக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நயன்தாரா. இவர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரை ரசிகர்கள் லேடி சூப்பர்ஸ்டார் என்று தான் அழைப்பார்கள்.
விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்த மாளவிகா மோகனன் பேட்டி ஒன்றில், " மருத்துவமனையில் கூட மேக்அப் போட்டு கொண்டு நடித்துள்ளார்" என்று நயன்தாராவை கலாய்த்தார்.
இதற்கு பதில் அளித்த நயன்தாரா, " கமர்சியல் படத்திற்கும் ரியலிஸ்டிக் படத்திற்கும்பல வித்தியாசம் இருக்கிறது. நான் பண்ணது கமர்சியல் படம். நான் இயக்குனர் என்ன சொன்னாரோ அதை தான் என்னால் செய்ய முடியும்" என்று பதில் அளித்தார்.

லேடி சூப்பர்ஸ்டார்?
இந்நிலையில் மாளவிகா மோகனன் பேட்டி ஒன்றில், " இனி ஹீரோயின்களை லேடி சூப்பர்ஸ்டார் என்று சொல்லாதீர்கள். ஆலியா பட் ஒரு சூப்பர்ஸ்டார், தீபிகா படுகோன் ஒரு சூப்பர்ஸ்டார் என சொல்லுங்கள்" என்று நயன்தாராவின் பெயரை குறிப்பிடாமல் மாளவிகா பேசியுள்ளார்.
இது நயன்தாராவை தாக்கி பேசியது போல் இருந்தது. இதனால் ரசிகர்கள், 'நயன்தாரா மீது கொண்டுள்ள வன்மத்தினால் தான் இது போன்று பேசுகிறார்' என்று கமன்ட் செய்து வருகின்றனர்.
