விஜய்யுடன் நடிக்கும் போது கர்ப்பம்!! வேண்டாம்-ணு சொல்லாமல் நடிகை மாளவிகா செய்த செயல்..
தமிழ் சினிமாவில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான உன்னைத்தேடி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக பிரபலமானவர்நடிகை மாளவிகா என்கிற ஸ்வேதா மேனன். இப்படம் சிறப்பான வரவேற்பை கொடுத்ததை அடுத்து, பல படங்களில் நடித்து வந்த மாளவிகா, சுமேஷ் மேனன் என்பவரை 2007ல் திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளை பெற்று சினிமாவில் இருந்து விலகி இருந்தார்..
இதன்பின் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்துள்ள மாளவிகா, கோல் படத்தின் மூலம் தமிழில் நடித்து பிரபலமானார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வரும் மாளவிகா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், கசப்பான சினிமா அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்.
அதில், இயக்குனரின் பெயர் குறிப்பிடாமல், அந்த இயக்குனர் கதை சொல்லும் போது வேறுமாதிரி கூறி, படப்பிடிப்பு தளத்தில் அதற்கு மாற்றாக வேறு மாதிரியாக எடுத்தார்.
ஆனாலும் அதற்கு ஒப்புக்கொண்டு நடித்தேன். முத்த காட்சிகள் கூட முன்பே சொல்லாமல், அதை செய்ய சொல்லி பண்ணினேன். கதைக்கு முக்கியம் என்று இயக்குனர் கூறி சமாதானம் செய்து பண்ண வைத்தார். அதன்பின் தான் அந்த சீன் மிகவும் மோசமானதாக இருந்துள்ளது. அந்த இயக்குனர் யார் என்று கூறமுடியாது, அதுதான் என்னுடைய கசப்பான அனுபவமாக இருந்ததாக கூறினார்.
மேலும், நடிகர் விஜய்யின் குருவி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடம் சம்மதம் தெரிவித்தேன். அறிமுக பாடலில் நடனமாட ஓகே சொன்ன சில மாதத்தில் நான் கர்ப்பமாகிவிட்டேன். மூன்று மாதம் கர்ப்பமாக இருந்ததால் அப்பாடலில் நடனமாடக்கூடாது என்று மருத்துவர்கள் கூறினார்கள்.
அதனால் விஜய் படம் என்ற ஒரு காரணத்தால் விலகிக்கொள்ளாமல், மாடல் அழகி போல் அங்கும் இங்குமாக நடப்பது போல் தான் நடித்ததாகவும் கூறியிருக்கிறார் மாளவிகா. இது தனக்கு ஏமாற்றமாக இருந்ததாகவும் விஜய் தென்னிந்திய ஹிருத்திக் ரோஷன் என்று கூறியிருக்கிறார்.