மமிதா பைஜூ உடன் ஜோடி சேரும் இயக்குநரின் வாரிசு.. யார் தெரியுமா
Shankar Shanmugam
Mamitha Baiju
By Kathick
நடிகை மமிதா பைஜூ தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக இருக்கிறார். விஜய்யுடன் ஜனநாயகன், விஷ்ணு விஷாலுடன் இரண்டு வானம், பிரதீப் ரங்கநாதனுடன் ஒரு படம் என தொடர்ந்து நடித்துக்கொண்டு இருக்கிறார்.

மேலும் தனுஷ், சூர்யா என அடுத்தடுத்த முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை.
இந்த நிலையில், நடிகை மமிதா பைஜூ இயக்குநர் ஷங்கரின் மகனுக்கு ஜோடியாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர், பிரபு தேவா இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளாராம்.

இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அர்ஜித் ஷங்கரின் ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கவுள்ளார் என லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.