தனுஷுக்கு ஜோடியாக நடிக்க நடிகை மமிதா பைஜு வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?

Dhanush Tamil Actress Mamitha Baiju JanaNayagan
By Karthick Raja Apr 23, 2026 03:30 PM GMT
Report

மமிதா பைஜு

மலையாளத்தில் அறிமுகமாகி இன்று தமிழில் சென்சேஷனல் நாயகியாக வலம் வருபவர் நடிகை மமிதா பைஜு. Dude திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிப்பில் ஜனநாயகன் வெளிவரவிருந்தது. ஆனால், சென்சார் சான்றிதழ் இதுவரை கிடைக்காததால் படம் வெளிவருவதால் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தனுஷுக்கு ஜோடியாக நடிக்க நடிகை மமிதா பைஜு வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா? | Mamitha Baiju Salary Dhanush Kara Movie Details

இந்த நேரத்தில் மமிதா பைஜு தனுஷுடன் இணைந்து நடித்திருக்கும் கர திரைப்படம் வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

சம்பளம்

இந்த நிலையில், கர திரைப்படத்தில் நடிக்க மமிதா பைஜு வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷுக்கு ஜோடியாக நடிக்க நடிகை மமிதா பைஜு வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா? | Mamitha Baiju Salary Dhanush Kara Movie Details

அதன்படி, இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க நடிகை மமிதா பைஜு ரூ. 2 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.