நடிகர் மம்மூட்டிக்கு புற்றுநோய்யா..? ரசிகர்கள் அதிர்ச்சி! உண்மை இதுதான்
மலையாளத்தில் மெகா ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் மம்மூட்டி. இவருக்கு உலகளவில் பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். மம்மூட்டி நடிப்பில் கடைசியாக வெளிவந்த dominic and the ladies purse திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'MMMN'. இப்படத்தை இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து தற்போது நடிகர் மம்மூட்டி பிரேக் எடுத்துள்ளார்.
இந்த நிலையில், அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது, புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என வதந்திகளை பரப்பிவிட்டனர். இந்த நிலையில், இதுகுறித்து படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.
இதில் "மம்மூட்டி ரமலான் நோம்பு இருப்பதால் விடுமுறையில் உள்ளார். இதனால், படப்பிடிப்பு இல்லை. இந்த பிரேக்கிற்கு பின் மம்மூட்டி மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன்லாலுடன் இணையவுள்ளார்" என தெரிவித்துள்ளனர். இதன்மூலம் அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.