சமந்தாவை தொடர்ந்து விஷால் பட நடிகைக்கும் அரியவகை நோய்!!! ஷாக்காகும் ரசிகர்கள்..
சமீபகாலமாக சினிமா நட்சத்திரங்களுக்கு நோய் தாக்கப்பட்டு வருவது அதிகரித்துள்ளது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு வருகிறேன் என்றும் எழுந்து கூட நடக்க முடியாத சூழலில் இருந்து குணமாகி வருகிறேன் என்றும் கூறியிருந்தார்.
நடிகை ஸ்ருதி ஹாசன் மூட மன உளைச்சல் ஏற்பட்டு தெரவி சிகிச்சை எடுத்துக்கொள்வேன் என்றும் கூறியிந்தார்.
மேலும் பல நடிகைகள் சில நோயால் பாதிகப்பட்டு வருவது அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் விஷாலுடன் சிவப்பதிகாரம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மம்தா மோகன் தாஸ்.
தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் மம்தா 38 வயதான நிலையில் தோல் நிறமி இழத்தல் என்ற அரியவகை நோய் பாதிக்கப்பட்டுள்ளதாக புகைப்படத்துடன் ஒரு பதிவினை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.