லவ் டுடே பாணியில் மொபைல் போனை மாற்றிய மணமகள்.. மாப்பிள்ளை போக்ஸோவில் கைது
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்றது.
அந்த படத்தில் ஹீரோவும், ஹீரோயினும் அவர்களின் மொபைல் போனை மாற்றிக் கொள்வார்கள். இதனால் அவர்கள் இடையே ஏற்படும் பிரச்சனைகளை பற்றி படத்தில் கூறியிருப்பார்கள்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த் என்பவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நிச்சயிக்கப்பட்டது . இந்நிலையில் லவ் டுடே படத்தில் மொபைல் போனை மாற்றிக்கொண்டு ஆராய்வது போல் அரவிந்திற்கு நிச்சியக்கப்பட்ட பெண்ணும் மொபைல் போனை வாங்கி ஆராய்ந்துள்ளார்.

போக்ஸோ
அதில் சிறுமியின் அந்தரங்க புகைப்படம் இருந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த பெண் காவல் நிலையில் புகார் அளித்துள்ளார். இதைதொடர்ந்து அரவிந்த் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பல ஆதரிச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அரவிந்த் இருக்கும் அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியைகாதல் வலையில் சிக்கவைத்து, அந்த பெண்ணின் அந்தரங்க புகைப்படத்தை வாங்கியுள்ளார்.
இதை குறித்த அந்த சிறுமியின் பெற்றோரிடம் தகவலை கூறி புகார் பெற்று அரவிந்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர் போலீஸார். இந்த சம்பவம் மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.