பொது இடத்தில் பெண்ணிடம் அத்துமீறிய நபர்!! பிக்பாஸ் ஸ்டைலில் குறும்படம் போட்ட போலீஸ்..
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சிறு குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகிறார்கள்.
சமீபத்தில் கூட கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விஷயம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ஓய்வதற்குள் மகாராஷ்டிர மாநிலம், தானேவில் 4 வயது சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் நடந்ததை அடுத்து பெரும் போராட்டமாக வெடித்துள்ளது.
இந்நிலையில் நெரிசல் மிகுந்த பகுதியில் ஆண் ஒருவர் பெண்ணை தகாத முறையில் தொடும் காட்சி பதிவாகியதை ஹைதராபாத் காவல்துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியாகி வைரலானது.
அதில் பொது இடங்கள் என்று நீங்கள் எந்தவொரு பகுதியில் தவறாக நடந்து கொண்டாலும் எங்களின் ஷீ டீம்கள் பதிவு செய்கிறது என்று கண்டித்தபடி ஒரு பதிவினை போட்டுள்ளதை பலரும் பாராட்டியும் அதை செய்பவர்களுக்கு கடுமையான தண்டை அளிக்கவும் வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.