கதை கேட்டு வேண்டாம்-னு அனுப்பிய நடிகர் விஜய்!! இயக்குனர் கூறிய உண்மை...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து தற்போது 200 கோடி அளவில் சம்பளம் வாங்கும் டாப் தென்னிந்திய நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் வேலைகள் பிஸியாக சென்று வந்துக்கொண்டிருக்க, படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் லிஸ்ட் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பல நட்சத்திரங்கள் விஜய் பற்றி தங்களின் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
அந்தவகையில் இயக்குனர் மணி பாரதி, விஜய், அஜித், சூர்யா பற்றிய பல விசயங்களை சித்ரா லட்சுமணன் பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில், விஜய்யுடன் நன்றாக பழகினேன், நட்பு இருந்தது. இரண்டு முறை கதை கூறியிருக்கிறேன் என்றும் அவரது தந்தை எஸ் ஏ சியும் அவருடன் சேர்ந்து கதை கேட்பார். ஞாயிற்று கிழமை அலுவலகத்திற்கு எஸ் ஏ சி வர சொல்லியதை மறந்துவிட்டார்.
விஜய் தூங்கிட்டு இருக்கிறார் என்று கூறி விஜய்யை எழுப்பி கூப்பிட்டு வர சொல்லி இருந்தார். தூக்கத்தில் இருக்கும் போது எப்படி கதை புரியும் என்பதற்காக இன்னொரு நாள் வந்து சொல்கிறேன் என்று கூறியும் கேட்கிறேன் என்று விஜய் கூறினார். கதையை கேட்டுவிட்டு அப்பாவிடம் சொல்லிவிடுகிறேன், இரண்டு நாட்களில் சொல்கிறேன் என்று அனுப்பி வைத்தார்.
அதன்பின் எஸ் ஏ சி என்னிடம், கதை எனக்கு பிடித்திருக்கிறது, விஜய்க்கு பிடிக்கவில்லை என்று கூறினார். உங்களுக்கு ஸ்கிரீன்பிளே நன்றாக இருக்கிறது, எதிர்காலத்தில் பண்ணலாம் என்று கூறினார். அதன்பின் இரண்டாம் முறை வேறொரு கதையை கூறட்டுமா என்று கேட்டு ஒருநாள் வரசொன்னதும் போனேன்.
சாரி இந்த கதையும் பிடிக்கவில்லை என்று தெரிவித்தார். ஆனால், இதுவரை 20 பேரை இயக்குனர் ஆக்கிருப்பேன், அவர்கள் யாரையும் எனக்கு தெரியாது. கதை பிடித்ததால் நடித்தேன், உங்களை இயக்குனராக்க ஆசைப்படுகிறேன், நீங்கள் எனக்கு பிடித்தமாதிரி கதை கூறாமல் இருக்கிறீர்கள் என்று விஜய் தன்னிடம் கூறியதாக மணி பாரதி தெரிவித்துள்ளார்.