கோடியால் குளிப்பாட்டிய மணிரத்னம்!! பொன்னியின் செல்வனுக்கு ஐஸ்வர்யா ராயின் சம்பளம் இவ்வளவா?
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் பொன்னியின் செல்வன் 2. முன்னணி நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி, பிரகாஷ் ராஜ், பார்த்திபன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள இப்படம் நல்ல வரவேற்பை மக்களிடத்தில் பெற்று வருகிறது.
இப்படத்தில் இவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கியிருக்கிறார்கள் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் நட்சத்திரங்களிலேயே விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவிக்கு மட்டுமே 10 கோடிக்கு மேல் சம்பளமாக கொடுத்துள்ளனர்.
ஐஸ்வர்யா ராய் - 10 கோடி, விக்ரம் - 12 கோடி, ஜெயம்ரவி 8 கோடி, திரிஷா - 5 கோடி, கார்த்தி 5.5 கோடி, ஐஸ்வர்யா லட்சுமி, பிரகாஷ் ராஜ், பிரபு போன்ற நட்சத்திரங்களுக்கு சுமார் 1.5 கோடி, சோபிதா, ஜெயராமுக்கு 1 கோடியும் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம்.
பல கோடி பட்ஜெட்டில் உருவாகிய இப்படத்தின் முதல் பாகம் 500 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இரண்டாம் பாகம் 500 கோடி வசூலித்தால் 1000 கோடி வசூலித்த படங்களில் பொன்னியின் செல்வன் படமும் பிடிக்கும்.
You May Like This Video
