எழுத்தாளர் கல்கி குடும்பத்தை மதிக்காத மணிரத்னம்.. குடும்பத்தினரை கவுரவிக்காதது ஏன்?
Ponniyin Selvan: I
Mani Ratnam
By Edward
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் எழுத்தாளர் கல்கி அவர்களில் பொன்னியின் செல்வன் காவியத்தை படமாக்கி செப்டம்பர் 30 ஆம் தேதி உலகளவில் ரிலீஸ் செய்யவிருக்கிறார்.
முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஆடியோ மற்றும் டிரைலர் லான்ச் நிகழ்ச்சி பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது.
இப்படத்தின் பிரமோஷனுக்காக படக்குழுவினருடன் மணிரத்னம் பல மொழி பிரஸ்மீட்களில் கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில், பொதுவாக மணிரத்னம் தன் படத்தில் இருக்கும் அனைவரையும் மதிக்கத்தெரிந்தவர்.
ஆனால் இப்படத்தின் முதல் கதாநாயகனான கல்கி அவர்களின் குடும்பத்தினரை மணிரத்னம் கவுரவிக்க மறந்துவிட்டார்.
இதை ஏன் மறந்துவிட்டார் மணிரத்னம் என்று இயக்குனரும் தயாரிப்பாளருமான சித்ராலட்சுமணன் அவர்களின் கேள்வியாக இருக்கிறது.