35 நாள் கூவத்தில் இருந்தேன்..திட்டினாங்க!! நடிகை மனிஷா யாதவ் வேதனை..

Tamil Cinema Tamil nadu Manisha Yadav
By Edward Feb 24, 2026 11:00 AM GMT
Report

மனிஷா யாதவ்

வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லனா நயன் தாரா, சண்டி முனி, ஒரு குப்பை கதை என்ற பல படங்களில் நடித்து பிரபலமானார் நடிகை மனிஷா யாதவ். ஒரு குப்பை கதை படத்திற்காக தமிழக அரசு சிறந்த நடிகைக்கான விருதினை சமீபத்தில் வழங்கி கெளரவித்தது. இதுகுறித்து மனிஷா யாதவ் பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.

35 நாள் கூவத்தில் இருந்தேன்..திட்டினாங்க!! நடிகை மனிஷா யாதவ் வேதனை.. | Manisha Yadav About Acting In Oru Kuppai Kathai

ஒரு குப்பை கதை

அதில், படம் வெளியாகி 8 ஆண்டுகளுக்குப்பின் எனக்கு விருது கிடைத்திருக்கிறது. இதற்கு முன் அப்படத்தில் நடித்ததற்கு எனக்கு விருது கிடைக்கும் என்று நினைத்தேன், தாமதமாக கிடைத்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான். அப்படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் சொன்னபோதே, நான் ஓகே சொல்லிவிட்டேன். எனக்கு கதை பிடித்திருந்தது.

நான் அந்த கதையை எப்படி பார்த்தேன் என்றால், கணவருக்கு தெரியாமல் செய்யும் தவறு ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படி இருக்கிறது, அந்த தவறை உணர்ந்து திருந்தி வாழும்போது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று சொல்லும் கதை. இது ஒரு கருத்துள்ள படமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் கதையை கேட்ட பல நடிகைகள் அப்படத்தில் நடிக்கமுடியாது என்று சொல்லியிருக்கிறார்கள்.

35 நாள் கூவத்தில் இருந்தேன்..திட்டினாங்க!! நடிகை மனிஷா யாதவ் வேதனை.. | Manisha Yadav About Acting In Oru Kuppai Kathai

காரணம் கணவருக்கு துரோகம் செய்யும் நெகட்டிவ் ரோ என்பதால் யாரும் நடிக்க வரவில்லை. அப்படத்தின் ஷூட்டிங்கிற்காக கிட்டத்தட்ட 35 நாட்கள் கூவத்தில் தான் இருந்தேன். அப்பாவி மனைவி, குழந்தையின் அம்மா என பூங்கொடி ரோலில் நடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டேன் படத்தை பார்த்துவிட்டு பலர் என்னை பாராட்டினாலும், ஒருசிலர் என்னை மோசமான வார்த்தையால் திட்டினார்கள், ஆனால் அப்படம் தான் எனக்கு இப்போது விருதை கொடுத்திருக்கிறது என்று மனிஷா யாதவ் தெரிவித்துள்ளார்.