விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா சொத்து மதிப்பு!! கொஞ்சம் தான் வித்தியாசம்..

Vijay Deverakonda Rashmika Mandanna Net worth
By Edward Feb 24, 2026 10:00 AM GMT
Report

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா இருவருக்கும் வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ளது. பிரபலங்கள், மொபைல் போன்களுக்கு அனுமதி இல்லை என்ற பல கண்டீசன்களுடன் திருமணம் நடக்கவுள்ள நிலையில் வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, விஜய் - ராஷ்மிகா இருவரும் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா சொத்து மதிப்பு!! கொஞ்சம் தான் வித்தியாசம்.. | Vijay Deverakonda And Rashmika Mandanna Net Worth

சொத்து மதிப்பு

விஜய் தேவரகொண்டா ஒரு படத்திற்கு ரூ. 30 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். ஹைதராபாத்தில் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களா, விலையுயர்ந்த ஆடம்பர சொகுசு கார்களும், ஒரு பிரைவேட் ஜெட்டும் வைத்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா. அவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 70 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் நேஷனல் க்ரஷ் என்று கொண்டாடப்பட்டு வரும் ராஷ்மிகா மந்தனா, ஒரு படத்தில் நடிக்க 5 முதல் 10 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்று வருகிறார். மும்பை, கோவா, கூர்க், ஹைதராபாத் என பல படங்களில் சொந்தமாக வீடு வாங்கி வைத்துள்ளார்.

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா சொத்து மதிப்பு!! கொஞ்சம் தான் வித்தியாசம்.. | Vijay Deverakonda And Rashmika Mandanna Net Worth

விலையுயர்ந்த சொகுசு கார்கள், முன்னனி நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாசிடராகவும் திகழ்ந்து சம்பாதித்து வருகிறார். அப்படி ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு ரூ. 66 கோடி என்று கூறப்படுகிறது. இருவரும் சொத்து மதிப்பு சேர்த்தால், சுமார் ரூ. 136 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.