உடல் ரீதியாக தொல்லை கொடுத்த பிரபல இயக்குனர்.. உண்மையை உடைத்த பிக்பாஸ் போகும் நடிகை

Bigg Boss Gossip Today
By Edward 1 மாதம் முன்
Edward

Edward

பிரபல தொலைக்காட்சி 5 ஆண்டுகளாக ஒளிப்பரப்பு செய்து நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். கமல் ஹாசன் 5 சீசன்களையும் தொகுத்து வழங்கியது போல் இந்த 6வது சீசனையும் தொகுத்து வழங்கவிருக்கிறார்.

பிக்பாஸ் வாய்ப்பு

வரும் அக்டோபர் 9 ஆம் தேதி துவங்கவிருக்கும் இந்நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்ளவுள்ளனர் என்ற லிஸ்ட் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

அந்தவகையில், தமிழில் வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், திரிஷா இல்லன்னா நயன் தாரா, ஒரு குப்பை கதை, சண்டிமுனி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை மனிஷா யாதவ் நிகழ்ச்சிக்கு செல்லவுள்ளாராம்.

மனிஷா யாதவ் குறித்து சினிமா விமர்சகர் வித்தகன் சேகர் கூறுகையில், இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் இடம் பொருள் ஏவல் என்ற படத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், சுனைனா, மனிஷா யாதவை கமிட் செய்து வைத்தார்.

உடல் ரீதியாக தொல்லை கொடுத்த பிரபல இயக்குனர்.. உண்மையை உடைத்த பிக்பாஸ் போகும் நடிகை | Manisha Yadav Complaint Against Top Director

பாலியல் தொல்லை

அதன்பின் மனிஷா யாதவ் சில காரணங்களால் நானாகத்தான் விலகி விட்டேன் என்று ஓப்பனாக கூறியுள்ளார். இதற்கு காரணம், சீனுராமசாமி, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதனால் தான் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டேன் என்றும் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து சீனுராமசாமி, மனிஷா யாதவ் கிராமத்து லுக்கிற்கு தான் தேர்வு செய்தேன். ஆனால் அவர் அதற்கு செட்டாகவில்லை என்று கூறினேன். பின் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க கேட்டதற்கு, விஜய் சேதுபதியுடன் தான் நடிப்பேன் என்று கூறியதால் அவரே படத்தில் இருந்து விலகியிருக்கிறார் மனிஷா யாதவ். அதன்பின் நடிகை நந்திதாவை நடிக்க வைத்திருக்கிறார் சீனுராம சாமி.

இந்த சம்பவம் 2014 ஆம் ஆண்டு நடைபெற்றப்பின் மனிஷா யாதவை தேடி எந்த வாய்ப்பும் வராமல் இருந்து வந்தார்.