நடிகர் மணிவண்ணன் இவர்களுடன் தொடர்பில் இருந்தாரா? பகீர் கொடுத்த பத்திரிக்கையாளர்..

manivannan bayilvan tamilactor
By Edward Dec 28, 2021 08:56 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 80, 90களில் நடிப்பு, இயக்கம், கதையாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மையை கொண்டு கலக்கியவர் நடிகர் மணிவண்ணன். நிழல்கள் படத்தில் கதையாசிரியராக ஆரம்பித்து முன்னணி இயக்குனர்கள் படத்திலும் முன்னணி நடிகர்கள் படத்தில் காமெடியனாகவும் வில்லனாகவும் நடித்து வந்தார்.

பல வெற்றிப்படங்களை இயக்கி பல விருதுகளை பெற்றார். தனது 59வது வயது 2013ல் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவர் பற்றிய சில தகவல்களை பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

மணிவண்ணன் கல்லூரி காலத்திலேயே நக்சலைட் உடன் தொடர்பில் இருந்தவர். மஜூந்தார் என்கிற நக்சலுடன் தொடர்பில் இருந்ததாக அவரே என்னிடம் கூறியுள்ளார் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.

மணிவண்ணன் உயிரோடு இருக்கும்போது இதைப் பற்றி சொல்லாமல் தற்போது அவரைப் பற்றி தப்பாக பேசுவது எந்த வகையில் ஏற்க முடியும் என பயில்வான் ரங்கநாதனை சிலர் சீண்டு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.