சிகிச்சைக்கு முன் மாறிய முகம்!! மரணத்திற்கு முன் நடிகர் மனோபாலா எடுத்த கடைசி புகைப்படம்..
80-களில் கொடிக்கட்டி பறந்த இயக்குனர்களில் ஒருவர் மனோபாலா. ஆகாய கங்கை படத்தில் ஆரம்பித்து 2002ல் வெளியான நைனா படம் வரை 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி பிரபலமானார். 300க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராகவும் நடித்து அனைவரையும் ஈர்த்து வந்தார்.
தமிழ் சினிமாத்துறையில் முக்கிய பங்காற்றி வந்த மனோபாலா தன்னுடைய 69வது வயதில் இன்று மதியம் 1 மணிக்கு மேல் மரணமடைந்துள்ளார். மனோபாலா அவர்கள் உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சமீபத்தில் கல்லீரல் பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் மனோபாலா.
அவரது மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பலரும் இரங்கல் செய்தியை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் மனோபாலா அவர்கள், கல்லீரல் பிரச்சனைக்கு முன் கூடி சுவாமி அவர்களை வணங்கிவிட்டு அங்கு எடுத்த புகைப்படத்தை கடந்த மார்ச் மாதம் வெளியிட்டுள்ளார்.
அப்புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
