தம்மாத்தூண்டு ரோலுக்கு அம்மாம் பெரிய பில்டப்!! லோகேஷை கண்டபடி திட்டிய பியோ படநடிகர்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, சஞ்ஜெய் தத், கெளதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், பிக்பாஸ் ஜனனி, மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வெளியான படம் லியோ.
கடந்த 19 ஆம் தேதி வெளியான லியோ படம் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தாலும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடித்திருந்த மன்சூர் அலிகான் லோகேஷ் கனகராஜை திட்டியபடி சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
500 கோடி முதல் போட்டு லட்சம் பேருக்கு வேலையை கொடுத்து ஒன்றரை ஆண்டுகளாக பாடுபட்டு 1000 கோடி வசூலுக்கு உழைக்கிறோம். ஆனா அரசியல்வாதிங்க ஒரு கையெழுத்து போட்டுட்டு 10 ஆயிரம் கோடி 20 ஆயிரம் கோடிய ஆட்டய போட்டுறான்.
லோகேஷ் கனகராஜ் என்ன வச்சு அந்த மாதிரி ஒரு அரசியல் படம் எடுக்கலாம்ல, அதவிட்டுட்டு தம்மாட்தூண்டு ரோலுக்கு அம்மாம் பெரிய பில்டப்பு, இல்லைனா வாங்க பாலஸ்தீனத்துக்கு விடுதலை வாங்கி கொடுக்கலாம்.
500 மிலிட்டரி டேங்கர், 500 ஆர்ம்பி ஏர் கிராஃப்ட் எடுத்துட்டு வாங்க, போருக்கு போய் எல்லா மிலிட்டரி தளத்தையும் அழிச்சிட்டு வரலாம், அப்பவிங்க சாவுராங்க.
சும்மா டம்பி துப்பாக்கி, அட்டக்கத்திய கையில் குடுத்துக்கிட்டு, வாங்க போருக்கு போகலாம் லோகேஷ் என்று பேசியிருக்கிறார். இதற்கு பல திட்டியும், ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்தும் வருகிறார்கள்.