நடிகர்கள் என்னுடன் நடிக்க தயங்கினார்கள்..இதான் காரணம்!! நடிகை பூஜா பத்ரா ஓபன்..
பூஜா பத்ரா
பாலிவுட் சினிமாவில் 90-களில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடிகையாக அறிமுகமாகி பலரின் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை பூஜா பத்ரா.
தமிழில் நடிகர் அஜித் நடித்த ஆசை படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தின் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் அடுத்தடுத்த படங்கள் பல மொழிகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்து ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

90களில் கவர்ச்சி காட்டும் நடிகைகளில் இவரும் ஒருவராக திகழ்ந்தார். இதையடுத்து அஜித்தின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஒருவன் போன்ற படங்களில் நடித்து இந்தி பக்கம் திரும்பினார். இதையடுத்து சோனு என்பவரை திருமணம் செய்த பூஜா பத்ரா சில ஆண்டுகளிலேயெ விவாகரத்து பெற்று பிரிந்தார்.
சமீபத்தில் பிரபல பாலிவுட் வில்லன் நடிகராக திகழ்ந்து வரும் நவாப் ஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கொரோனா லாக்டவுன் சமயத்தில் எளிமையாக திருமணம் செய்து கொண்ட பூஜா இந்த வயதில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

உயரம் காரணமாக
இந்நிலையில் 49 வயதாகும் பூஜா பத்ரா அளித்த பேட்டியொன்றில் 1990களில் என் உயரம் காரணமாக பல கதாநாயகர்கள் என்னுடன் நடிக்கத் தயங்கியதால் ஏராளமான பட வாய்ப்புகள் கைநழுவிப் போனது.
தற்போது சினிமா தொழில்நுட்ப வளர்ச்சி, படைப்பாளிகள் இடையே ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக உயரம் பெரிய விஷயமாக பார்க்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார்.