அந்த பிரபல நடிகையை கட்டிப்பிடிக்க தயங்கிய சூர்யா.. நடிகர் ஓபன் டாக்!!

Suriya Simran Actors Tamil Actors G. Marimuthu
By Dhiviyarajan Jun 19, 2024 03:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தான் சூர்யா. இப்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார்.

கடைசி இரண்டு வருடங்களாக சூர்யா நடிப்பில் எந்தப் படமும் வெளியாகததால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உடன் கூட்டணி வைத்துள்ளார்.

இந்நிலையில் மறைந்த நடிகர் மாரிமுத்துவின், பேட்டி கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர், நாம் ஒரு புதுமுக நடிகரை தட்டிக்கொடுத்து வேலை வாங்க வேண்டும். நேருக்கு நேருக்கு படத்தில் நான் இயக்குனர் வசந்த்திடம் உதவி இயக்குநராக பணியாற்றினேன்.

அந்தப் படத்தில் சூர்யா நடிப்பதற்கு ரொம்பவே தடுமாறினார். ஒரு காட்சியில் சிம்ரனை கட்டிப்பிடிக்க சொன்னார் வசந்த், ஆனால் சூர்யாவால் அது முடியவே இல்லை. அப்போது அவர் தயங்கி தயங்கி நடித்தார். ஒருகட்டத்தில் அது நடிப்பு என்பதை அவர் புரிந்துகொண்டு நடிக்க தொடங்கினார் என மாரிமுத்து கூறியுள்ளார்.  

அந்த பிரபல நடிகையை கட்டிப்பிடிக்க தயங்கிய சூர்யா.. நடிகர் ஓபன் டாக்!! | Marimuthu Speak About Actor Suriya