குஷ்புவ விட குறைச்சலா! அண்ணாத்த படத்தில் மீனாவின் சம்பளம் இவ்வளவு தானா?

salary meena kushboo annaatthe
By Edward Dec 15, 2021 06:15 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளாக 80, 90களில் கொடிக்கட்டி பறந்தவர்கள் பலர். அதில் தற்போது வரை இளமையுடன் இருப்பவர்கள் ஒருசிலரே. அந்தவரிசையில் இருந்து வருபவர் நடிகை மீனா. சூப்பர் ஸ்டார் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து முத்து எஜமான் உள்ளிட்ட படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்து கொடிக்கட்டி பறந்தார்.

இடையில் ஒருசிலங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வந்த மீனா தற்போது மகள் நைனிகாவையும் சினிமாவில் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் அண்ணாத்த படத்தில் மீனாவிற்கு மாமாவாக நடித்திருந்தார் ரஜினிகாந்த். அவருடன் நடிகை குஷ்புவும் நடித்துள்ளார்.

இப்படத்திற்காக இவ்விருவர்களை விட கீர்த்தி சுரேஷ், நயன் தாரா பல 2 கோடிக்கும் மேல் சம்பளமாக பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் நடிகை மீனா அண்ணாத்த படத்தில் சம்பளமாக எவ்வளவு பெற்றார் என்றும் அவரின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

அண்ணாத்த படத்திற்காக நடிகை மீனா 80 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார் என்று அவரைவிட நடிகை குஷ்பு 1 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம். அதேபோல் மீனாவின் மொத்த சொத்து மதிப்பு 85 கோடி என்றும் கூறப்படுகிறது.