அந்த விஷயத்தில் அனிகாவையே மிஞ்சிய நடிகை... 40 வயது ரஜினியே அதிர்ச்சியாகிய சம்பவம்..
Meena
Anikha Surendran
By Edward
சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் தங்களின் சிறு வயதில் இருந்தே நடிக்க ஆரம்பித்து நடிகைகளாக முன்னேறுவது வழக்கம். ஆனால் அது தற்போது அதிகரித்து 18 வயதுக்குள் நடிகையாகி விடுகிறார்கள். அந்த வரிசையில் அனிகா, எஸ்தர் அணில், ரவீனா தாஹா, உள்ளிட்ட குட்டி நட்சத்திரங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்கள்.
ஆனால் அவர்களையே மிஞ்சி நடிப்பில் கலக்கியவர் தான் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து 13 வயதில் தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை மீனா. அதன்பின் தமிழில் ராசாவின் மனசிலே படத்தில் 40 வயதுக்கு மேலான நடிகர் ராஜ்கிரனுக்கு ஜோடியாக நடித்தார். இதனை தொடர்ந்து, எஜமான் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-க்கு ஜோடியானார். 15 வயது சிறுமியுடன ரொமான்ஸ் செய்வது என்று ரஜினியும் ஷாக்காகி வாய்ப்பிளந்துள்ளாராம்.