மீனாவிடம் சில்மிஷம் செய்தவரை பந்தாடிய கேப்டன்!! நடிகையை உயிரோட மீட்டவர்கள் அந்த நடிகர்கள்...
நடிகை மீனா தமிழில் முன்னணி ஹீரோயினாக 80கள் மற்றும் 90களில் இருந்தவர். அவர் தற்போது குணச்சித்திர வேடங்கள், டிவி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் தான் கலந்துகொண்டு வருகிறார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனாவிற்கு அடையாளம் கொடுத்த படம் அன்புள்ள ரஜினிகாந்த் தான். அதன் பின் எஜமான், வீரா, முத்து போன்று ரஜினியுடனே 3 ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
தயாரிப்பாளர் சிவா
இந்நிலையில் மீனா பற்றிய ஒரு விஷயத்தை தயாரிப்பாளர் சிவா பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். அதில், விஜயகாந்த் படத்தில் மட்டும் கேட்பனாக இல்லை, எந்த விஷயத்தை எடுத்தாலும் அவர் கேப்டன். தனிமனிதனாக இருந்து பல வேலைகளும் வலிகளும் பட்ட அவமானங்களும், நடத்திய போராட்டங்களும் சாதாரணம் கிடையாது.
வெறுமனே ஸ்டார் நைட் நடத்தி எல்லாரும் டான்ஸ் ஆடி சம்பாதித்த பணம் கிடையாது ஒவ்வொரிடமும் உட்கார்ந்து வசூல் செய்த காசு. நடிகை மீனா மலேசியாவில் இருந்து அன்று உயிரோடு வந்ததற்கு காரணமே விஜயகாந்த் சார்தான். மலேசியாவில் இருந்து சிங்கபூருக்கு செல்லும் போது ஓட்டல் வாசலில் 1000 பேர் கூடி நிற்க, பெரிய போலீஸ் பாதுகாப்பு இல்லை.
மீனாவிடம் சில்மிஷம்
அப்போது தள்ளுமுள்ளாகிய நிலையில் யாரும் இல்லாததால் கேப்டன், நெப்போலியன் சார், சரத்குமார் சார் என 3 பேர் சேர்ந்து நடிகைகளின் பெரிய பெரிய பெட்டிகளை எடுத்து பஸ்ஸில் ஏற்றினார்கள். அப்போது யாரோ ஒரு நபர் ஹெல்மெட் அணிந்தவாறு மீனாவிடம் நெருங்கி வந்து தவறாக நடக்க முயன்றார்.
கூட்ட நெரிசலில் யாரையுமே கண்ட்ரோல் செய்யமுடியவில்லை. மீனாவிடம் மிகவும் மோசமாக அந்த நபர் நடந்து கொள்ள முயன்றார். எங்களால் அந்த கூட்டத்தில் எதுவுமே செய்யமுடியவில்லை.
பந்தாடிய கேப்டன்
மீனாவிடம் சில்மிஷம் செய்ய வந்த நபரை கவனித்துவிட்ட கேப்டன், ஆவேசமாக ஓடிவந்து ஹெல்மெட்டுடன் அலேக்காக மேலே தூக்கி அவரை வீசினார். ஹெல்மெட்டை கழட்டி மண்டையில் ஓங்கி அடித்ததில் ரத்தம் பொலபொலவென கொட்டியது. அதை பார்த்த தள்ளுமுள்ளு செய்தவர்கள் அத்தனை பேரும் பயந்து ஓடிவிட்டனர்.
அதன்பின் தான் நடிகைகளை அந்த வாகனத்தில் பத்திரமாக ஏற்றி அழைத்துவர முடிந்தது. கேப்டன் அந்த நபரை தாக்கியதை பார்த்து அப்படியே சினிமா ஷாட் மாதிரி இருந்தது என்று தயாரிப்பாளர் சிவா ஓப்பனாக கூறியுள்ளார்.