கணவர் இறந்த பின் மீனா எடுத்த முக்கிய முடிவு!
நடிகை மீனாவின் கணவர் கடந்த ஜூன் மாத இறுதியில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். புறா எச்சத்தால் ஏற்பட்ட தொற்று அவரது உயிர் போகும் அளவுக்கு பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது என கூறப்படுகிறது.
கணவரை இழந்த துயரத்தில் இருந்த மீனா தற்போது தான் படிப்படியாக மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி இருக்கிறார். அவர் ரம்பா, சங்கவி உள்ளிட்ட மற்ற நடிகைகள் உடன் வெளியில் சென்று இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது.

இந்நிலையில் மீனா தன் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக தெரிவித்து இருக்கிறார். தனது கணவருக்கு இன்னும் உறுப்பு தானம் கிடைத்து இருந்தால் அவரது உயிரை காப்பாற்றி இருக்க முடியும் என அவர் கூறி இருக்கிறார்.
ஒருவர் உறுப்பு தானம் செய்தால் 8 உயிர்களை காப்பாற்ற முடியும், எனக்கு ஏற்பட்ட நிலை மற்றவர்களுக்கு வர கூடாது என்பதற்காக மீனா தன் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்து இருக்கிறார்.