அவருக்காக அதை பண்ணதே இல்லை.. கணவரை பற்றி முதல் முறையாக பேசிய மீனா!!
குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமான மீனா, தென்னிந்திய சினிமாவில் சக்சஸ் புல் கதாநாயகியாக நடிகை மீனா வலம் வருகிறார்.
மீனா வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார். கடந்த ஆண்டு மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு நுரையீரல் தோற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவு பலரையும் அதிர்ச்சி அடையவைத்தது.
இந்நிலையில் நடிகை மீனா கணவர் குறித்து பேசியிருக்கிறார். அதில் அவர், என்னுடைய கணவர் வித்யாசாகர் இருந்த வரைக்கும் அழகாக சமையல் செய்வார். எனக்கு சரியா சமையல் செய்ய வராது. என்னையும் கூப்பிட்டு அடிக்கடி இதை கட் பண்ணி தான் அதை கட் பண்ணி தான் என கூறுவார்.
நான் அவருக்கு பிடித்த சாப்பாடு நான் செஞ்சு கொடுத்தது கிடையாது. அவர் தான் எங்களுக்கு சமைத்து கொடுப்பார். ரொம்ப நல்ல சமைத்து கொடுப்பார் என்று மீனா கூறியுள்ளார்.