கமலுடன் ஒரு நாளாவது இருக்க வேண்டும்.. இளம் நடிகையின் ஆசை

Kamal Haasan
By Parthiban.A Apr 03, 2023 01:23 PM GMT
Report

நடிகர் கமலுக்கு எவ்வளவு ரசிகர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என கணக்கெடுப்பது இயலாத காரியம், அந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். கமல் படங்களை பார்த்து அவருக்காகவே சினிமாவில் நுழைத்த லோகேஷ் கனகராஜ் போன்ற பல இயக்குனர்களும் இருக்கிறார்கள்.

தற்போது கோப்ரா, கென்னடி கிளப் பட புகழ் நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் சமீபத்திய ஒரு பேட்டியில் கமல் ஹாசன் பற்றி பேசி இருக்கிறார்.

"எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும், அவருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என ஆசை இருக்கிறது. அது மட்டுமின்றி கமல் உடன் ஒரு நாளாவது உதவியாளராக இருக்க வேண்டும். அவர் படத்திற்காக என்னவெல்லாம் செய்கிறார் என அருகில் இருந்து பார்க்க வேண்டும்" என மீனாட்சி கோவிந்தராஜன் கூறி இருக்கிறார்.

அவர் ஆசையை கமல் நிறைவேற்றுவாரா?  

GalleryGalleryGallery