சாதி, மதம், பாலினம் எல்லாம் நீங்கள் தேர்வு செய்தது கிடையாது!! நடிகை மீனா...
மீனா
தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமானவர் தான் நடிகை மீனா. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பிரச்சனையால் மரணமடைந்தார். அதிலிருந்து மீண்டு வந்த மீனா, மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் மீனா, சமூக, அரசியல் கருத்துகளை வெளிப்படையாக பதிவிடாமல் இருந்து வந்தார். தற்போது மனிதநேயத்தை மையப்படுத்தி ஒரு கருத்தை பகிர்ந்துள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சாதி, மதம், பாலினம்
அதில், உங்கள் சாதி, மதம், பிறந்த இடம், பாலினம் எல்லாம் நீங்கள் தேர்வு செய்தது கிடையாது, பிறப்பால் கிடைத்தது. அதனால் அவற்றை நினைத்து பெருமைப்பட வேண்டாம், அதற்கு பதிலாக உங்கள் குணநலன், உங்கள் செயல்கள், நீங்கள் தினமும் தேர்வு செய்யும் மனிதநேயம் ஆகியவற்றை நினைத்து பெருமைப்படுங்கள் என்று கூறியிருக்கிறார் மீனா.

சமூகத்தில் அடிக்கடி சாதி, மதம், மொழி, பாலினம் உள்ளிட்ட பிரச்சனைகள் விவாதமாக மாறி வரும் சூழலில் எந்த தரப்பையும் விமர்சிக்காமல் பொதுவாக, மனிதநேய கருத்தை மீனா பகிர்ந்திருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.