ஆண்கள் மட்டுமே தவறு செய்பவர்கள் அல்ல..ரவி மோகனை எனக்கு தெரியும்!! நடிகை மீரா சோப்ரா சப்போர்ட்..

Gossip Today Divorce Meera Chopra Aarti Ravi Ravi Mohan
By Jai May 21, 2026 03:30 AM GMT
Report

மீரா சோப்ரா

தமிழ் சினிமாவில் நடிகர் எஸ் ஜே சூர்யா நடித்த அன்பே ஆருயிரே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் தான் நடிகை மீரா சோப்ரா. சமீபத்தில் நடிகர் ரவி மோகன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து, தான் தன் மனைவி மற்றும் அவர் வீட்டாரால் எப்படி கஷ்டப்பட்டேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ரவி மோகன் அப்படி பேசியதற்கு பலரும் ஆதரவு கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், மீரா சோப்ராவும் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

ஆண்கள் மட்டுமே தவறு செய்பவர்கள் அல்ல..ரவி மோகனை எனக்கு தெரியும்!! நடிகை மீரா சோப்ரா சப்போர்ட்.. | Meera Chopra Supports Ravi Mohan Amid Divorce

அதில், ரவி மோகனை தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியும். தென்னிந்திய சினிமாவில் பணியாற்றிய காலத்திலேயே அவர் மிகவும் எளிமையான, இனிமையான மனிதர் என்ற எண்ணம் என்னிடம் உருவானது.

எப்போதும் ஆண்கள் மட்டுமே தவறு செய்பவர்கள் அல்ல, சில நேரங்களில் பெண்களும் சட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதை பார்த்திருக்கிறோம். ஒரு பிரச்சனையில் இரு தரப்பினரின் குரலையும் கேட்க வேண்டும், ரவி மோகனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் மீரா சோப்ரா.