இயக்குனருடன் நெருக்கம்! பாய் பெஸ்டிக்கு வாழ்த்துக்கூறிய நடிகை மீரா ஜாஸ்மின்
நடிகர் மாதவன் நடிப்பில் இயக்குனர் என் லிங்குசாமி இயக்கத்தில் சூப்பர் ஹிட் கொடுத்த படம் ரன். மாதவனுக்கு ஜோடியாக முக்கிய கதாபாத்திரத்திரத்தில் நடித்தவர் நடிகை மீரா ஜாஸ்மின்.
இப்படத்தில் கிடைத்த வரவேற்பால் பாலா, புதிய கீதை, அஞ்சநேயா, ஆயுத எழுத்து, சண்டகோழி, திருமகன், நேபாளி, மரியாதை இங்க என்ன சொல்லுது போன்ற படங்களிலும் நடித்திருந்தார். இடையில் தமிழில் வாய்ப்பு கிடைக்காமல் மலையாளம் பக்கம் சென்ற மீரா ஜாஸ்மின் 8 வருடங்களாக திருமணம் செய்தப்பின் சினிமாவைவிட்டு விலகினார்.
அனில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்ட மீரா சில கருத்து வேறுபாடு காரணமாக இருபரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது மீண்டும் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
அதற்காக போட்டோஷூட் எடுத்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார். தற்போது மலையாள இயக்குனரான அருண்கோபியோடு அணைத்தபடி எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார் மீரா ஜாஸ்மின்.
