41 வயதில் இப்படியா!! இறுக்கமான டி சர்ட்டில் நடிகை மீரா ஜாஸ்மின் வெளியிட்ட புகைப்படங்கள்..
தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான ரன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை மீரா ஜாஸ்மின்.
இப்படத்தினை தொடர்ந்து பாலா, புதிய கீதா, ஆஞ்சநேயா, ஜூட், ஆயுத எழுத்து, கஸ்தூரி மான், சண்டக்கோழி, திருமகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்த மீரா ஜாஸ்மின் நடித்த படங்கள் அதன்பின் தோல்விகளை சந்தித்து மார்க்கெட்டை இழந்தார். பின் 2014ல் அனில் ஜான் என்பவரை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகினார்.
அதன்பின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளுக்கு பின் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். தயாரிப்பாளர் சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் 'டெஸ்ட்' படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாராவோடு நடிகை மீரா ஜாஸ்மினும் இணைந்துள்ளார்.
ஆரம்பத்தில் கிளாமரே காட்டாமல் இருந்த மீரா ஜாஸ்மின், தற்போது 41 வயதாகிய நிலையில் உச்சக்கட்ட கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.
தற்போது டிசர்ட் அணிந்து ரசிகர்களை மயக்கும் படியான போஸ் கொடுத்து சில புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் மீரா ஜாஸ்மின்.