9 வருடத்துக்கு பின் ரீஎண்ட்ரி!! வாய்ப்பு கிடைச்சதும் நயன்தாராவுக்கு வில்லியான 40 வயது நடிகை!!
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தவர் நடிகை மீரா ஜேஸ்மின். கேரளாவில் இருந்து தமிழில் இறக்குமதி செய்யப்பட்ட நடிகையான மீரா ஜாஸ்மின் மாதவனுடன் முதலேயே படத்தில் ஜோடியாக நடித்தார்.
அப்படம் கொடுத்த மிகப்பெரிய வரவேற்பால் ரசிகர்களை அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். துருதுரு நடிப்பால் அனைவரையும் ஈர்த்து வந்த மீரா ஜாஸ்மின் 2014 ஆம் ஆண்டுக்கு பின் சினிமாவில் பெரியளவில் தலைக்காட்டாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் விக்ரம் வேதா மற்றும் மண்டேலா போன்ற படங்களை தயாரித்த, ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் மாதவன், நடிகை நயன் தாரா, சித்தார்த் உள்ளிட்ட நடிகர்கள் இணைந்திருக்கும் டெஸ்ட் படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
சுமார் பல ஆண்டுகள் கழித்து மாதவன் நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ள மீரா ஜாஸ்மின், வில்லி ரோலில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நயன் லீட் ரோலில் நடிக்கும் நிலையில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியான மீரா ஜாஸ்மினும் கமிட்டாகியுள்ளது ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
