காந்தி , நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா? போலிசுக்கு சவால் விடும் சூப்பர் மாடல் நடிகை..
2016ல் மாடலிங் துறையில் மிஸ் சவுத் என்ற பட்டத்தை பெற்றவர் மீரா மிதுன். சமீபகாலமாக பிரபலங்கள், ஆரசியல் வாதிகளை வம்பிக்கிழுத்து அசிங்கமாக பேசிசர்ச்சையை கிளப்பினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தன் பெயரை தமிழ்செல்வி என்று சமுகவலைத்தளத்தில் வெளியிட்டார். சமீபத்தில் சிலரை சாதியை வைத்தும் இயக்குநர் ஒருவரை சாதியை குறித்து பேசி திரைத்துறையை விட்டு நீக்கவேண்டும் என்று கூறி அவர் ஆண் நண்பருடன் பேசும் வீடியோவை வெளியிட்டார்.
இந்த அடாவடி பேச்சிற்கு பலரும் கடுமையான விமர்சனத்தை கூறி வந்தனர். இதைதொடர்ந்து மீராமிதுன் தன்னை கைது செய்ய பலர் மிரட்டுகிறார்கள் என்று என்னை கைது செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார். என்னைவிட்டு தமிழ்நாட்டை விட்டு செல்ல முடியாது. அப்படி கூறும் ஆண்கள் என்மீது ஆசைப்படுவதால் தான் இப்படி நடந்து கொள்கிறார்கள்.
ஏன் காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா? என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து மீராமிதுன் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் போலிசார். இந்த விவகாரம் குறித்து மீராமிதுனுக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டுள்ளதாம்.