சர்ச்சைகளுக்கு பெயர் போன மீரா மிதுன்.. இப்போது இப்படி ஒரு நிலையா
சில வருடங்களுக்கு நடிகை மீரா மிதுன் தன்னை தானே சூப்பர் மாடல் என கூறிக்கொண்டு சுற்றியவர். இணையத்தில் சர்ச்சையாக பேசி பேசி பிரபலம் ஆன அவர் அந்த புகழை கொண்டு பிக் பாஸ் ஷோவில் கூட போட்டியாளராக நுழைந்தார்.
ஆனால் அவர் சர்ச்சையாக பேசுவதே இறுதியில் அவரை பெரிய வம்பில் மாட்டிவிட்டது. அவர் பட்டியலினத்தவர்கள் பற்றி சர்ச்சையாக பேசியதற்காக சில வருடங்களுக்கு முன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் அதன் பின் ஜமீனின் வந்த அவர் தலைமறைவாகிவிட்டார். 3 வருடங்களை தலைமறைவாக இருந்த அவரை தற்போது போலீசார் டெல்லியில் கைது செய்து இருக்கின்றனர்.
மன நல மருத்துவமனையில்
இந்நிலையில் மீரா மிதுன் டெல்லியில் மன நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.
அதனால் மீரா மிதுனை சென்னைக்கு அழைத்து வருவதில் சிக்கல் இருப்பதாக போலீசார் கூறி இருக்கின்றனர்.