ஜனநாயகன் பார்த்து வீடியோ போட்டதால் அசிங்கமாக பேசிய நபர்கள்!! பதிலடி கொடுத்த நடிகை..
மீஷா கோஷல்
தமிழ் சினிமாவில் துணை நடிகையாக பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மீஷா கோஷல். 7 ஆம் அறிவு, ராஜா ராணி, வணக்கம் சென்னை, வடகறி, வாலு, விசாரணை, மெர்சல், லத்தி, ரத்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

சமீபத்தில் ஜனநாயகன் படத்தை பார்த்து எமோஷனலாக ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் சிலர், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள், உங்களுக்கு ஜனநாயகன் படம் முக்கியமா என்றபடி அசிங்கமான வார்த்தைகளில் திட்டியபடி கருத்துக்களை பகிர்ந்து வந்துள்ளனர்.
அவர்களை கண்டித்து தற்போது மீஷா கோஷல் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
தளபதி Fans அதனால இவ்வளவு Haters- ஆ? அப்படி என்ன தப்பு பண்ணிட்டோம்.. வேற ஹீரோ படமா இருந்தா இவ்வளவு பேச மாட்டீங்க.. சின்ன குழந்தைங்க கூட உங்கள விட Maturity-ஆ இருப்பாங்க.. போராட்டம் வேற படம் வேற என்று பேசி தக்க பதிலடி கொடுத்து பேசியுள்ளார். அந்த வீடியோவிற்கு பலரும் தங்களின் ஆதரவான கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.