6 ஆண்டுகள் காதல்.. வருங்கால கணவர் பற்றி முதல் முதலாக பேசிய மேகா ஆகாஷ்!!
மேகா ஆகாஷ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2019 -ம் ஆண்டு வெளியான "பேட்ட" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் மேகா ஆகாஷ்.
இப்படத்தில் இவர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார். இப்படத்தை தொடர்ந்து மேகா ஆகாஷ் நடிப்பில் வந்தா ராஜாவா தான் வருவேன், என்னை நோக்கி பாயும் தோட்ட போன்ற படங்கள் வெளியானது. இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
கடந்த 22-ம் தேதி சாய் விஷ்ணு என்பவருடன் மேகா ஆகாஷுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது. அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
6 ஆண்டுகள் காதல்!
இந்நிலையில் மேகா ஆகாஷ், முதன் முறையாக தனது காதலர் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், எனக்கு சாய் விஷ்ணுவை ஒன்பது ஆண்டுகளாக தெரியும். 6 ஆண்டுகள் காதலித்து வருகிறோம். சாய் விஷ்ணு காலா, கபாலி போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.
அதன் பின் சினிமாவில் இருந்து விலகி பிஸ்னஸில் ஈடுபட்டுள்ளார். திரைப்படம் இயக்குவதை பற்றி யோசி வருகிறார் என மேகா ஆகாஷ் கூறியுள்ளார்.